FIR against Ponmudy: தமிழக அமைச்சர் பொன்முடியின் ஆபாசமான கருத்துக்காக எஃப்ஐஆர் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கோரியுள்ளது.
FIR against Ponmudy: தமிழக அமைச்சர் பொன்முடியின் ஆபாசமான கருத்துக்காக எஃப்ஐஆர் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கோரியுள்ளது.
Published on: April 17, 2025 at 8:32 pm
Updated on: April 17, 2025 at 8:33 pm
சென்னை, ஏப்.17 2025: பெண்கள், சைவர்கள் மற்றும் வைணவர்கள் குறித்து ஆபாசமாகப் பேசியதற்காக வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வியாழக்கிழமை (ஏப்.17 2025) வந்துள்ளது. அதில், அமைச்சர் பொன்முடி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய தமிழக காவல்துறைக்குக்கு உத்தரவிட்டது.
முன்னதாக, தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின் அமைச்சர் பொன்முடி மீதான சலசலப்பை தொடர்ந்து, ஏப்ரல் 11ஆம் தேதியன்று அவரிடம் இருந்த கட்சிப் பொறுப்ப பறித்தார்.
அதாவது, பொன்முடி வகித்து வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. எனினும், பொன்முடி அமைச்சராகத் தொடர்கிறார்.
இதையும் படிங்க : அதிமுக, பாஜக கூட்டணியின் நோக்கம் இதுதான்; மனம் திறந்து பேசிய நயினார் நாகேந்திரன்.!
இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில், உயர் நீதிமன்றம் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமனை அழைத்து, பொன்முடியின் உரையை சுட்டிக்காட்டியது. அப்போது, அது இன்னும் பொதுவில் இருப்பதாகவும், அமைச்சர் மன்னிப்பு கேட்டாலும் அதை புறக்கணிக்க முடியாது என்றும் கூறியது.
மேலும், அமைச்சருக்கு எதிராக காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நடவடிக்கைக்கு முன்னதாக மக்களவை எம்.பி.யும், திமுக மூத்த தலைவருமான கே.கனிமொழியும் இந்தப் பேச்சைக் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இஸ்லாமியர்கள் நெஞ்சில் பால் வார்த்த தீர்ப்பு: நடிகர் விஜய் அறிக்கை.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com