ஆன்மீக பெரியோர்கள் விரும்பும் ஆட்சியை நடத்துகிறோம்.. மு.க ஸ்டாலின்!

M K Stalin: “ஆன்மீக பெரியோர்கள் விரும்பும் ஆட்சியை நடத்தி வருகிறோம்” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Published on: January 7, 2026 at 7:26 pm

சென்னை ஜனவரி 7, 2026: ஆன்மீக பெரியோர்கள் விரும்பும் ஆட்சியில் நடத்தி வருகிறோம் என கூறியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமித் ஷா வா? அல்லது அவதூறு ஷா வா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாடு வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். குறிப்பாக திமுக இந்துக்களுக்கு எதிரான ஆட்சியை நடத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “தமிழ்நாட்டில் ஆன்மீக பெரியோர்கள் விரும்பும் ஆட்சியில் நடத்தி வருகிறோம்; அமித் ஷா வா? அல்லது அவதூறு ஷா வா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதையும் படிங்க: அமித் ஷாவிடம் பேசினேன்.. ஓபிஎஸ் ஓபன் டாக்!

மேலும், ” தமிழகம் வந்துள்ள அமித்ஷா அவதூறு பரப்பி சென்றுள்ளார்; தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிரான ஆட்சி நடைபெறுகிறது என்று கூறியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாட்டில் இந்துக்களின் உரிமை பறிக்கப்படுகிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்; இந்த குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்த குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை; வட மாநிலங்களைப் போல் வெறுப்பு பரப்புரை செய்யலாமா என அவர்கள் நினைக்கிறார்கள் எனவும் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இலவச மடிக்கணினி திட்டத்தை நிறுத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி.. மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com