சென்னை காம்தார் நகர் பிரதான சாலைக்கு எஸ்.பி.பி பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

February 17, 2025
சென்னை காம்தார் நகர் பிரதான சாலைக்கு எஸ்.பி.பி பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Published on: September 25, 2024 at 6:31 pm
M K Stalin | மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு புதிய கௌரவமாக காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து மு.க. ஸ்டாலின் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “பாடும் நிலா #SPBalasubrahmanyam அவர்களது நினைவு நாளில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பாடும் நிலா #SPBalasubrahmanyam அவர்களது நினைவு நாளில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.#SPB… pic.twitter.com/UuwwR1m1E0
— M.K.Stalin (@mkstalin) September 25, 2024
40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ள எஸ்.பி.பி பாலசுப்பிரமணியம், தனது 74வது வயதில் செப்.25, 2020ல் காலமானார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, எஸ்.பி.பி மகன் பாடகர் சரண் முதலமைச்சருக்கு கோரிக்கை ஒன்றை விடுத்து இருந்தார்.
அதில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு எஸ்.பி.பி பெயர் சூட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், காம்தார் சாலைக்கு எஸ்.பி.பி பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தி.மு.க, வி.சி.க கூட்டணியில் விரிசல் இல்லை: தொல். திருமாவளவன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com