உதய சூரியன் சின்னத்தில் போட்டி.. 5 தொகுதிகள் கோரிக்கை.. ஜவாஹிருல்லா

Jawahirullah: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயாராக உள்ளோம் எனத் தெரிவித்த ஜவாஹிருல்லா, 5 தொகுதிகள் வரை கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.

Published on: February 23, 2026 at 9:37 pm

சென்னை, பிப்.23, 2026: 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் தொடர்பான தொகுதிப் பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவுடன் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த முறை 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தனிச்சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் 6 தொகுதிகள் வரை வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

ஜவாஹிருல்லா பேட்டி

அதேபோல், ம.ம.க கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவும், தி.மு.க. தேர்தல் பங்கீடு குழுவிடம் பேசினார். இந்த கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட தயாரக உள்ளோம் என்றார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், “திமுக கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மமகவுக்கு 5 இடங்களை கேட்டுள்ளோம்; முதல்மைச்சர் மு.க ஸ்டாலின் உடன் கலந்து பேசி முடிவெடுப்பதாகக் கூறியுள்ளனர்” என்றார். மேலும், இது முதற்கட்ட பேச்சுவார்த்தைதான்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகக் கூறியுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் மாணவர் மீது சாதிவெறி தாக்குதல்.. நடவடிக்கை கோரும் திருமாவளவன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com