Dindigul | திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தின் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Dindigul | திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தின் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
Published on: September 21, 2024 at 1:52 pm
Updated on: September 21, 2024 at 2:15 pm
Dindigul | திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வழங்கப்பட்ட நெய்யில் கலப்படம் இருப்பதாக புகார்கள் எழுந்தன. தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் நெய்யில் விலங்கின் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் கலந்திருப்பது தெரியவந்தது.
நாடு முழுவதும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திண்டுக்கல் ஏ ஆர் டெய்ரி நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். இங்கு இருந்தும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நெய் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதற்கிடையில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பால், நெய் பொருட்களின் மாதிரிகள் சேகரிப்பதற்காக திண்டுக்கல் வந்தனர். அவர்கள் அங்கிருந்த பால், நெய் உள்ளிட்ட பொருள்களில் ஆய்வு நடத்தினார்கள்.
மேலும், நிறுவனத்தில் இருந்து பால், நெய் உள்ளிட்ட பொருள்களை சேகரித்து சென்றார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதி லட்டில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளிவரும் நிலையில் கர்நாடகாவில் நந்தினி பால், நெய் மட்டுமே கோவில்களில் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சென்னை- கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு: ரயிலை கவிழ்க்க சதியா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com