Indian National League Party: பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேற வேண்டும் என இந்திய தேசிய லீக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Indian National League Party: பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேற வேண்டும் என இந்திய தேசிய லீக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Published on: June 25, 2025 at 5:40 pm
Updated on: June 25, 2025 at 6:31 pm
சென்னை, ஜூன் 25 2025: இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் நாகூர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேற வேண்டும் என இந்திய தேசிய லீக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும், “இந்திய தேசிய லீக் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று ஜூன் 24-ம் தேதி (புதன்கிழமை) நடைபெற்றது. மாநில தலைவர் எம்.நாகூர்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் சையத் ஷாதான அகமது முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர்கள் ஆம்பூர் பஷீர், முகமது இக்பால் பாஷா உள்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மேலும், “இந்திய தேசிய லீக் சார்பில் உருவாக்கப்பட்ட சமூகநல அறக்கட்டளையை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பஷீர் அகமது கைப்பற்றி வைத்துள்ளார். நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த டிரஸ்டை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சி வளர்ச்சி பணிகளுக்காக தமிழக பிரிவை 5 மண்டலமாக பிரிப்பது, மண்டலங்களுக்கு தலைவர், செயலாளர், அமைப்பாளர்களை நியமனம் செய்வது எனவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மதவாத சக்திகள் சர்வ சாதாரணமாக மதபிரிவினைவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் துடிக்கும் மதவாத சக்திகளை சுதந்திரமாக தமிழக காவல்துறை செயல்பட விடுகிறது. இதனால் அமைதி பூங்காவாக இருக்கும் தமிழநாடு சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதிற்கு தி.மு.க. அரசின் செயல்பாடுக்கு இந்த கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, மதமோதலை நாடு முழுவதும் பா.ஜ.க.ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் முருகன் மாநாடு என்ற பெயரில் இஸ்லாமிய – இந்து சகோதர்களிடையே பிரிவை ஏற்படுத்த பா.ஜ.க. சதி செய்து கொண்டு இருக்கிறது. தமிழக மக்களிடையே மதமோதலை உருவாக்க துடித்து கொண்டு இருக்கும் பா.ஜ.க. அ.தி.மு.க. கூட்டணி வைத்திருப்பதற்கு இந்திய தேசிய லீக் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறது.
தமிழக மக்களின் நலன் கருதி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேற வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இந்திய தேசிய லீக் நிர்வாக குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்த மனித அழிப்பு செயல்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். இஸ்ரேல் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர்பதற்றத்தை தணிக்க ஐ.நா.சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் பி.ஜே.பி பருப்பு ஒருநாளும் வேகாது; கி. வீரமணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com