இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி குறைப்பு.. மார்க்சிஸ்ட் நிலை என்ன?

2026 Tamil Nadu Legislative Assembly elections: திமுக கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் ஐந்து இடங்களில் போட்டியிடுகிறது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

Published on: March 18, 2026 at 3:15 pm

Updated on: March 18, 2026 at 3:22 pm

சென்னை மார்ச் 18, 2026; தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது; இந்த தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் நான்காம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் இழந்த ஆட்சியைப் பிடிக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது; அதே நேரம் ஆட்சியை தக்க வைக்க திமுக தரப்பிலும் கூட்டணியை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் கட்டமாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் வழங்கப்பட்டது; தொடர்ந்து அதிகபட்சமாக மதிமுகவுக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன; இதில் மூன்று இடங்களில் திமுக சின்னத்தில் மதிமுக போட்டியிடும். இது தவிர இந்திய யூனிட் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு இரு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டன; 2021 சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிட்ட நிலையில் ஒரு இடம் குறைக்கப்பட்டு ஐந்து இடங்கள் மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் எட்டு இடங்கள் கேட்பதாகவும், ஆறு தொகுதிகள் வரை வழங்க திமுக முன் வந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், திமுக கூட்டணியில் அங்கம் வைக்கும் மற்றொரு கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் 10 சீட்டுகள் வரை கேட்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க; இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1 தொகுதி குறைப்பு.. தி.மு.க. அதிரடி!

காரில் தீ வைத்து தற்கொலை: தாயை கட்டிஅணைத்தபடி இருந்த குழந்தைகள்: நெல்லையில் இதயத்தை உருக்கும் சம்பவம் Thisayanvilai

காரில் தீ வைத்து தற்கொலை: தாயை கட்டிஅணைத்தபடி இருந்த குழந்தைகள்: நெல்லையில் இதயத்தை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com