Y category security for actor Vijay: தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
Y category security for actor Vijay: தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
Published on: October 4, 2025 at 3:02 pm
சென்னை அக்டோபர் 4 2025; தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பிலிருந்து இசட் பிரிவுக்கு பாதுகாப்பு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
கரூர் துயரம்
நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பேரணி ஒன்றை நடத்தினார். இந்தப் பேரணியின் போது அவர் செந்தில் பாலாஜியை விமர்சித்து பாட்டு பாடி கொண்டிருந்தார். இந்த பேரணியின் போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் தங்களின் இன் உயிரை இழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
சிபிஐ விசாரணை கோரிக்கை
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது.
மேலும் நடிகர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்? அவரின் பரப்புரை வாகனம் ஏன் இதுவரை பறிமுதல் செய்யப்படவில்லை என்பன போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக தலைமை குறித்தும் விமர்சித்தார். இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பில் மாற்றம் வருவதாக சில செய்திகள் வெளியாகின.
உள்துறை அமைச்சகம் விளக்கம்
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் நடிகர்- தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு பரிந்துரைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:நீதியை வெளிக்கொணர உழைக்கிறோம்.. டேராடூனில் ஆதவ் அர்ஜூனா பேட்டி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com