சென்னையில் போலீஸ் என்கவுன்ட்டர்.. பிரபல ரவுடி கணேஷ் மரணம்!

Madhavaram Encounter: Ganesh Killed: சென்னையில் போலீஸ் என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி ஆர். கணேஷ் என்ற தொப்பை கணேஷ் மரணமடைந்தார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: March 16, 2026 at 1:53 pm

சென்னை, மார்ச் 16, 2026: கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆர். கணேஷ் என்ற தொப்பை கணேஷ் மாதவரம் அருகே போலீஸ் ‘என்கவுன்ட்டரில்’ உயிரிழந்தார். அதாவது இன்று (திங்கட்கிழமை) காலை 5.45 மணியளவில் நடந்த என்கவுன்ட்டரில் 38 வயதான ஹிஸ்டரி ஷீட்டர் ஆர். கணேஷ் வியாசர்பாடி போலீசாரால் மாதவரம் ரவுண்ட்அப்ட் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார்.

யார் இந்த கணேஷ்?

கணேஷ் ஏ வகை ஹிஸ்டரி ஷீட்டராக இருந்து, கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. மேலும், சமீபத்தில் புழலில் நடந்த 25 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் கொள்ளை வழக்கில், ஒன்பது பேர் கொண்ட கும்பலை அவர் திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

என்ன நடந்தது?

இன்று காலை போலீசார் அவரை சுற்றிவளைத்தபோது, அவர் ஓடி ஒரு காலியாக இருந்த கட்டிடத்திற்குள் ஓடி மறைந்தார் என்றும் போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்றபோது, போலீசார் அவரை சுட்டுப் பிடித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த கணேசுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜய்யிடம் சிபிஐ விசாரணை.. TVK யாருடன் கூட்டணி?

எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும்.. இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுக்கும் திமுக.. மு.க ஸ்டாலின் பரபரப்பு பேச்சு! MK Stalin

எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும்.. இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுக்கும் திமுக.. மு.க ஸ்டாலின்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com