K. N. Nehru: தமிழக அரசில் ஒளிவு மறைவு இன்றி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன எனக் கூறிய அமைச்சர் கே.என். நேரு, எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றார்.
K. N. Nehru: தமிழக அரசில் ஒளிவு மறைவு இன்றி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன எனக் கூறிய அமைச்சர் கே.என். நேரு, எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றார்.

Published on: October 29, 2025 at 7:20 pm
சென்னை, அக்.19, 2025: தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறை செயற்பொறியாளர் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்த நிலையில், மூத்த அமைச்சர் கே.என். நேருவுக்கு இது சிக்கலை ஏற்படுத்தும் என்றும் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் செய்திகள் பரவின.
இந்த நிலையில் அரசுக்கு களங்கம் கற்பிக்க முயற்சிகள் செய்யப்படுவதாக அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், ‘தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத் துறை உதவி செயற்பொறியாளர் நியமனத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை.
ஒளிவு மறைவு இன்றி
நகராட்சி நிர்வாகத்தை பொறுத்தவரை ஒளிவு மறைவு இன்றி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன” என்றார். மேலும், தற்போதைய குற்றச்சாட்டுகள் குறித்தும் அமைச்சர் கே.என். நேரு விளக்கம் அளித்தார். அதில், ‘பல ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கை தூசு தட்டியுள்ளனர். மேலும், இதன்மூலம் களங்கம் கற்பிக்க அமலாக்கத்துறை முயவ்கிறது” என்றார்.
இதையும் படிங்க : ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு.. யாரை காப்பாற்ற தி.மு.க துடிக்கிறது? அன்புமணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com