Assembly Election 2026: திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்ட கடந்த காலங்களில் நாங்கள் விட்டுக் கொடுத்தோம் என்பதை கூறிய காங்கிரஸ் கூட்டணி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், திமுக அளிக்க முன்வரும் 25 தொகுதிகள் போதாது என தெரிவித்தார்.
Assembly Election 2026: திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்ட கடந்த காலங்களில் நாங்கள் விட்டுக் கொடுத்தோம் என்பதை கூறிய காங்கிரஸ் கூட்டணி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், திமுக அளிக்க முன்வரும் 25 தொகுதிகள் போதாது என தெரிவித்தார்.

Published on: March 2, 2026 at 10:35 am
சென்னை மார்ச் 2 2026; தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு பொது தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் திமுகவும் காங்கிரசும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிட காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறப்படுகிறது. இந்த தொகுதிகள் போதாது என காங்கிரஸ் கட்சியின் கூட்டணி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில்,” கடந்த காலங்களில் திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது நாங்கள் அவர்களுக்காக விட்டுக் கொடுத்துள்ளோம்; காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் என்பது போதாது. கூடுதலாக தொகுதிகளை கேட்டு பெறுவோம். மேலும் மாநிலங்களவை சீட்டும் பெறுவோம்” என்றார்.
மேலும், எங்கள் குழுவும் திமுக குழுவும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விவாதித்தோம்; நாங்கள் எங்களது விருப்பப்பட்டியலை அவர்களிடம் கொடுத்துள்ளோம். பேச்சு வார்த்தை நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. நாங்கள் கேட்கும் தொகுதிகளை திமுக வழங்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க; 210 தொகுதிகளில் வெல்வோம்.. மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com