மதசார்பற்ற என்ற கருத்தை இடைச்செருகல் என விமர்சித்த கவர்னர் ஆர்.என். ரவிக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே. சந்துரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதசார்பற்ற என்ற கருத்தை இடைச்செருகல் என விமர்சித்த கவர்னர் ஆர்.என். ரவிக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே. சந்துரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on: September 26, 2024 at 10:30 am
K Chandru slams R N Ravi | Madurai | சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே. சந்துரு கல்வி நிறுலனங்களில் சாதி பாகுபாடு என்ற தலைப்பில் மதுரையில் பேசினார். அப்போது, கவர்னர் ஆர்.என். ரவியின் மதச்சார்பற்ற கருத்துக்கு எதிரான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கே. சந்துரு, “கவர்னர் ஆர்.என். ரவியின் இந்தப் பேச்சுகள் அரசியலமைப்புக்கு எதிரானவை. அவரை கவர்னராக நியமித்த பாஜக சட்டத்தை மதிப்பேன் என உறுதிமொழி எடுத்துள்ளது. ஆனால் ஆர்.என். ரவியின் பேச்சுகள் அதற்கு எதிராக உள்ளன.
மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட்டபோது, அவ்வளவு எளிதாக இல்லை. திருநெல்வேலியில் ஓர் கல்வி நிறுவனம் பட்டியலின சமையல் பெண்மணியை ஏற்க மறுத்தது.
மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கு சீல் வைத்து விடுவேன் என மிரட்டிய போதும், அவர்கள் நீதிமன்றம் சென்றனர். சமத்துவத்தைப் பறைசாற்ற வேண்டிய ஒரு பள்ளி நிர்வாகம் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைப் பாதுகாக்க எல்லா வழிகளிலும் சென்றபோது, பள்ளி நிர்வாகத்தை மூன்றாவது நபரின் கையகப்படுத்த நான் ஆணையிட்டேன்” என்றார்.
தொடர்ந்து, கவுண்டம்பாளையம் என்ற படத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த சந்துரு, “இது போன்ற படங்கள் குறிப்பிட்ட ஓர் சமூகத்தினரை நாடக காதல் என்ற குற்றச்சாட்டுக்கு கீழ் கொண்டுவருகின்றன.
ஜாதி மற்றும் மத அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிரான திருத்தங்களை அறிமுகப்படுத்திய அமெரிக்கா, பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் போன்ற சட்டங்களைக் கொண்ட இந்தியாவை விட திறமையாக செயல்படுத்துவது போல் தெரிகிறது” என்றார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com