Edappadi Palaniswam: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ₹5,000 வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
Edappadi Palaniswam: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ₹5,000 வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

Published on: December 28, 2025 at 9:23 pm
சென்னை டிசம்பர் 28, 2025: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திருப்போரூர் பகுதியில் பேசுகையில், “2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும்; தீய சக்தி திமுகவை எதிர்த்து கட்சி தொடங்கியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். திமுக என்னும் தீய சக்தியை வேரோடு அழிக்கத்தான் எம்ஜிஆர் புதிய கட்சி தொடங்கினார். இன்றளவும் அதிமுகவின் லட்சியம் அதுதான். திமுகவை பொருத்தமட்டில் அவர்கள் கொடுத்த வாக்குறுதியில் ஐந்து சதவீதம் மட்டுமே நிறைவேற்றி உள்ளனர்” என்றார்.
150 நாட்கள் வேலை
தொடர்ந்து தேசிய கிராம ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ” இந்தத் திட்டத்தின் வேலை நாட்கள் 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுகவின் கோரிக்கையை ஏற்று தான் 125 நாட்களாக திட்டத்தின் வேலை நாட்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சிக்கு வந்தால் இத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த பாடுபடுவோம்” என்றார்.
பொங்கல் பரிசு
தொடர்ந்து பொங்கல் பரிசு குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ” இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகப்பில் ரொக்கமாக ரூபாய் 5000 வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கி, பல திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக என கூறிய எடப்பாடி பழனிச்சாமி, ” தமிழகத்தில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையான ஊதியம் வழங்கப்படவில்லை” எனவும் குற்றம் சாட்டினர்.
இதையும் படிங்க; பாஜகவுடன் கூட்டணி வைத்து எம்எல்ஏ ஆனது யார்? நானா.. திருமாவளவனா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com