சென்னை, அக்.3, 2025: அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “முதல்வர் மு.க ஸ்டாலின், இராமநாதபுரம் மாவட்டத்தில் பேசுவதற்கு முன் ஒரு முறை கண்ணாடியைப் பார்த்திருக்கலாம். அத்தனை கேள்வியும் அவரைப் பார்த்து அவரே கேட்க வேண்டியது.
கச்சத்தீவைப் பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியில் 39 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் பேசாமல், இப்போது வந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் உங்கள் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவை தாரை வார்த்த கருணாநிதி
“கச்சத்தீவைத் தாரை வார்த்தவர் உங்கள் தந்தை கருணாநிதி. அன்று மத்தியில் ஆட்சியில் இருந்தது, இன்று நீங்கள் கைகோர்த்து நிற்கும் காங்கிரஸ் கட்சி. கச்சத்தீவு பற்றி சண்டை போடவேண்டும் என்றால், உங்கள் கூட்டணிக்குள்ளேயே சண்டை போட்டுக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி ஏன் செல்லவில்லை…
கரூர் துயரத்தின் போது அவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்கள் எல்லாம் ஏன் அப்போது அங்கே செல்லவில்லை? இது அரசியல் தானே? என்று வீராவேசமாகப் பேசும் முதல்வரே.நான் கேட்கிறேன்- கரூருக்கு ஓடோடி சென்ற நீங்கள், கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை? வேங்கைவயலுக்கு ஏன் செல்லவில்லை? ஏர் ஷோ-வில் உயிரிழந்தோர் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை? அப்போது நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா?” எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி கொள்கை..இதையடுத்து அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ள பெயிலியர் மாடல் ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும் என்பதே எங்களது கொள்கை எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : உரிய பாதுகாப்பு கொடுத்திருந்தால் உயிர்கள் போயிருக்குமா? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்