சப்தமில்லாமல் சாதித்து காட்டிய அ.தி.மு.க எம்.பி ஐ.எஸ் இன்பதுரை

KN Nehru : தி.மு.க. மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.என் நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: June 5, 2026 at 8:03 pm

சென்னை, ஜுன் 5, 2026: தமிழகத்தின் முன்னாள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு பதவிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் “வேலைக்கு லஞ்சம்” (Cash-for-jobs) விவகாரத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளது. இந்த தகவலை தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் வழக்குரைஞர் விஜய் நாராயணன், நீதிமன்றத்தில், டி.வி.ஏ.சி, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது தனது சட்ட ஆலோசனையின் அடிப்படையிலேயே என தெரிவித்தார். அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை தாக்கல் செய்த மனுவின் பேரில், நீதிமன்றம் 2026 பிப்ரவரி 20 அன்று டி.வி.ஏ.சி.-க்கு உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாகவும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய தாமதம் செய்ததற்காக டி.வி.ஏ.சி மீது தாக்கல் செய்யப்பட்ட அவமதிப்பு மனுவில் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டது.

மேலும், இந்த விவகாரம், 2025 அக்டோபர் மாதம் அமலாக்கத் துறை இயக்குனரகம் (இ.டி.) வழங்கிய 232 பக்க ஆவணங்களின் அடிப்படையில் தொடங்கியது. அந்த ஆவணங்களில், 2,538 பணியிடங்கள் உதவி என்ஜினீயர்கள், ஜூனியர் என்ஜினீயர்கள், நகர திட்ட அலுவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக ₹25 லட்சம் முதல் ₹35 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாகவும், மொத்தம் ₹630 கோடி அளவிலான ஊழல் நடந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அமலாக்க அதிகாரிகள் அமைச்சர் நேருவின் சகோதரர் தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனையில் இந்த ஆவணங்களை கைப்பற்றியது. அப்போது சென்னை உயர் நீதிமன்றம், “இவ்வளவு பெரிய அளவில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய தாமதம் ஏற்க முடியாது” என்று தெளிவாகக் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : புதிய அரசியல் கட்சி…அண்ணாமலை அதிரடி.. பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அறிவிப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com