Durai Vaiko: மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், “என்னால் பிரச்சனை வேண்டாம்” என்கிறார் துரை வைகோ.
Durai Vaiko: மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், “என்னால் பிரச்சனை வேண்டாம்” என்கிறார் துரை வைகோ.
Published on: April 19, 2025 at 8:35 pm
சென்னை ஏப்ரல் 19 2025: மறுமலர்ச்சி திராவிட கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் துரை வைகோ இன்று (ஏப்ரல் 19 2025) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மறுமலர்ச்சி திராவிட கழகத்தின் நிர்வாக குழு கூட்டத்திற்கு பின்னர் இது தொடர்பாக முழுமையான விடை கிடைக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய துரை வைகோ, ” என்னால் பிரச்சனை வேண்டாம் என நினைக்கிறேன்; கட்சியில் ஒரு தொண்டனாக இருக்கவே நான் விரும்புகிறேன்” என்றார்.
நிர்பந்தத்தின் பேரில் அரசியல்..
இதற்கிடையில் தாம் நிர்பந்தத்தின் பெயரில் அரசியலுக்கு வந்ததாக துரை வைகோ கூறினார். இதுகுறித்து அவர் பேசுகையில், “நிர்பந்தத்தின் பெயரிலே நான் அரசியலுக்கு வந்தேன். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பத்தின் பெயரில் நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றேன்.” என்றார்.
முன்னதாக தமது விலகல் குறித்து பேசிய துரை வைகோ, ” கட்சியில் இருக்கும் ஒருவரால் தலைவர் வைகோவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது; நான் இருக்கும் வரை அந்த அவப்பெயரை ஏற்க விட மாட்டேன்” எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அரசியல் நோக்கர்கள், ” குறிப்பிட்ட ஒரு நபரை கட்சியிலிருந்து நீக்க துரை வைகோ விரும்புகிறார். அதற்கான அரசியல் நாடகம் தான் இது. அவரை நீக்கினால் தான் நான் கட்சியில் தொடர்வேன் என்பது போல் இவரது பேட்டி உள்ளது” என்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘ஈழத்தில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கட்டும்’; வைகோ ஈஸ்டர் வாழ்த்து!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com