Dr. Ramadoss: 2026 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அமைப்பது வெற்றி கூட்டணியாக திகழும் என அக்கட்சியின் நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Dr. Ramadoss: 2026 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அமைப்பது வெற்றி கூட்டணியாக திகழும் என அக்கட்சியின் நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: January 19, 2026 at 11:11 am
Updated on: January 19, 2026 at 2:15 pm
சென்னை ஜனவரி 19, 2026; 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அமைக்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக திகழும் என பாமக கட்சியின் நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பின்போது அவரிடம் நிருபர்கள், அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து கருத்து கேட்டனர்; அதற்கு பதில் அளித்த மருத்துவர் ராமதாஸ், தேர்தல் அறிக்கையில் என்ன வேண்டுமானாலும் கூறலாம் என தெரிவித்தார்.
மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு
சென்னையை அடுத்த விழுப்புரம் தைலாபுரத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது; இந்தக் கூட்டத்திற்கு பின்னர் கட்சியின் நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக திகழும்” என்றார். மேலும், ” இதுதான் சிறந்த கூட்டணி; நல்ல கூட்டணி; நாணயமான கூட்டணி என மக்கள் பேசும் வகையில் இது இருக்கும். நாங்களும் இப்படிப்பட்ட ஒரு கூட்டணியை அமைக்க தான் காத்திருக்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க; பெண்களுக்கு ரூ. 2000… ஆண்களுக்கும் இலவச பேருந்து.. இபிஎஸ் இன் அதிரடி தேர்தல் அறிக்கை
அதிமுக தேர்தல் அறிக்கை.. ராமதாஸ் விமர்சனம்
தொடர்ந்து அதிமுக தேர்தல் அறிக்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மருத்துவர் ராமதாஸ், ” தேர்தல் வாக்குறுதிகளில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்; எப்படியாவது ஓட்டு வாங்கலாம் என எதையாவது சொல்லலாம். எனினும் மக்கள் தான் தீர்மானிப்பார்கள்” என்றார்.
பாமக உட்கட்சி பிரச்சனை
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகனான மருத்துவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கட்சியில் உள் கட்சி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்; இந்நிலையில் மருத்துவர் ராமதாஸிடம் இருந்து இந்த விமர்சனம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு அரசு வேலை: முதலமைச்சர். மு க ஸ்டாலின் அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com