ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு அரசு வேலை: முதலமைச்சர். மு க ஸ்டாலின் அறிவிப்பு

MK Stalin: ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை தழுவி வெற்றியடையும் சிறந்த வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் தறையில் அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார் .

Published on: January 17, 2026 at 6:12 pm

Updated on: January 18, 2026 at 12:42 am

மதுரை, ஜனவரி 17 2026: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண்பதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அலங்காநல்லூர் வந்திருந்தார். அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்ப்பளித்தனர்.

பின்னர் மேடையில் அமர்ந்தவாறு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வெளியேறும் காளைகளையும் அவற்றை அடக்க முயலும் வீரர்களையும் நேரில் பார்வையிட்டார். அப்போது ஜல்லிக்கட்டில் வெற்றியடைந்த காளையின் உரிமையாளருக்கு தங்க நாணயம் மற்றும் மோதிரங்களை பரிசாக வழங்கினார்.

பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும் மற்றும் அலங்காநல்லூரில் ரூ. 2 கோடியில் உயர்தர ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் சிகிச்சை மையம் அமைக்கப்படும் உள்ளிட்ட இரண்டு வாக்குறுதிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார்.

இதையும் படிங்க : பெண்களுக்கு ரூ. 2000… ஆண்களுக்கும் இலவச பேருந்து.. இபிஎஸ் இன் அதிரடி தேர்தல் அறிக்கை

மேட்டூர் அணை திறப்பில் தாமதம்.. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Edappadi Palanisamy

மேட்டூர் அணை திறப்பில் தாமதம்.. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்.. எடப்பாடி பழனிசாமி

குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டம்.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
₹135 Crore Special Package

குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டம்.. முதலமைச்சர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com