Rajya Sabha election : பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் உதவியாளர், மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Rajya Sabha election : பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் உதவியாளர், மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: March 5, 2026 at 7:03 pm
சென்னை, மார்ச் 5, 2026: 2026 ஆம் ஆண்டுக்கான ராஜ்யசபா (மாநிலங்களவை) தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 10 மாநிலங்களில் 37 இடங்களுக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. மேலும் வாக்குப்பதிவு 2026 மார்ச் 16 அன்று நடைபெற உள்ளது. வழக்கமான ஆறு ஆண்டுச் சுழற்சியின் ஒரு பகுதியாக, மார்ச் முதல் நவம்பர் 2026 வரை மொத்தம் 72 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும்.
அந்த வகையில், மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு? மேற்கு வங்காளம், அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்கள் 2026 ராஜ்யசபா தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் (மார்ச் 16, 2026) இடம்பெறுகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாட்டில் இருந்து கிறிஸ்டோபர் திலக் என்பவர் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டைன் ஆகிய இருவர் போட்டியிடுகின்றனர்.
திடீர் பரபரப்பு
இதற்கிடையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட சுயேட்சையாக மனு தாக்கல் செய்தார்.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை எற்படுத்தி இருந்தது. எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லாத காரணத்தால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு அதிகமாகும்.
மேலும், ராஜ்யசபா தேர்தலில் மொத்தம் ஆறு சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளநிலையில், அவர்களுடைய மனுக்கள் நிராகரிக்கப்பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தி.மு.க கூட்டணி உடையாதா என ஏக்கம்? மு.க ஸ்டாலின்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com