Dr Ramadoss: நான் அதிமுகவோடு கூட்டணி சேருங்கள் என்றேன். அவர்கள் பாரதிய ஜனதா கட்சிதான் வேண்டுமென அழுதார்கள் என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாார்.
Dr Ramadoss: நான் அதிமுகவோடு கூட்டணி சேருங்கள் என்றேன். அவர்கள் பாரதிய ஜனதா கட்சிதான் வேண்டுமென அழுதார்கள் என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாார்.
Published on: May 29, 2025 at 1:25 pm
சென்னை, மே 29 2025: பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் முன்னாள் தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் மீண்டும் அம்பலம் ஏறியுள்ளது.
நான் செய்த தவறு
இது குறித்து பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்- தலைவர் ராமதாஸ், “நான் செய்த தவறு 35 வயதில் அன்புமணியை அமைச்சர் ஆக்கியதுதான். என் சத்தியத்தையும் மீறி நான் இதனை செய்தேன். அந்த வகையில் நான் தவறு செய்து விட்டேன்” என்றார்.
இதையும் படிங்க : நெல் கொள்முதல் விலையை ரூ.69 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல; மருத்துவர் ராமதாஸ்
தாயை அடிக்க முயன்ற அன்புமணி
தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் அவரது தாயை அடிக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டையும் மருத்துவர் ராமதாஸ் முன்வைத்துள்ளார். இது குறித்து பேசிய மருத்துவர் ராமதாஸ், “அன்புமணி தனது தாயார் சரஸ்வதி மீது பாட்லை எறிந்து தாக்க முயன்றார்” என்றார். மேலும், அன்புமணி ராமதாஸ் கட்சியினரிடம் அனுதாபம் தேட முயற்சிக்கிறார் என்றார். தொடர்ந்து பேசிய அவர், “என்ன தவறு செய்துவிட்டேன் நான் என கட்சிக்காரர்களிடம் கேட்டு அன்புமணி ராமதாஸ் அனுதாபம் தேட முயற்சிக்கிறார்.
தவறான ஆட்டத்தை தொடங்கி, அடித்த ஆட முயன்றவர் அவர்தான்” என்றார். மேலும் இதையெல்லாம் நான் போகிற போக்கில் சொல்லவில்லை எனக் கூறிய மருத்துவர் ராமதாஸ், “ஆதாரத்தோடு ஒளிவு மறைவு இன்றி நடந்ததை அப்படியே வெளிப்படுத்துவேன்” என்றார்.
பா.ஜ.க.வோடு கூட்டணி அழுகை
தொடர்ந்து கடந்த தேர்தலில் பா.ம.க.வின் கூட்டணி நிலைப்பாடு குறித்து பேசிய ராமதாஸ், “நான் அதிமுகவோடு கூட்டணி வையுங்கள் என்றேன். ஆனால் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வேண்டும் என்றார். அன்புமணியும், சௌமியாவும் என் கால்களை பிடித்துக் கொண்டு அழுதார்கள். நான் சம்மதித்தேன். அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்திருந்தால் பா.ம.கவுக்கு 3 இடங்களாவது கிடைத்திருக்கும். மேலும், அவர்களுக்கும் 6-7 இடங்கள் கூடுதலாக கிடைத்திருக்கும்” என்றார்.
இதையும் படிங்க : அன்னை தமிழ்தான் உலகின் மூத்த மொழி; அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com