Doctor Gandaraj Case | நடிகைகள் பற்றி ஆபாசமாக பேசிய விவகாரத்தில் “உளப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன்” என மருத்துவர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.
January 28, 2026
Doctor Gandaraj Case | நடிகைகள் பற்றி ஆபாசமாக பேசிய விவகாரத்தில் “உளப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன்” என மருத்துவர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

Published on: September 21, 2024 at 6:20 pm
Doctor Gandaraj Case | கேரளத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான நிலையில் பல்வேறு முக்கிய நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்தன. மாநிலத்தின் எம்.எல்.ஏ. ஆக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நடிகர் முகேஷ் மீதும் புகார்கள் எழுந்தன.
தொடர்ந்து, மலையாள திரையுலகின் அம்மா சங்க நிர்வாகிகள் சித்திக் உள்ளிட்டோர் மீதும் பாலியல் புகார்கள் எழுந்தன. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் திருவனந்தபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
இந்த விவகாரம் குறித்து யூ-ட்யூப் சேனல் ஒன்றுக்கு மருத்துவர் காந்தாராஜ் பேட்டியளித்திருந்தார். இந்தப் பேட்டியை முக்தார் என்பவர் எடுத்திருந்தார்.அப்போது மருத்துவர் காந்தராஜ் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்தார்.
இது சர்ச்சையாக வெடித்தது. இந்த நிலையில் காவல் நிலையத்தில் நடிகை ரோகிணி இதுதொடர்பாக புகார் அளித்தார்.இந்தப் புகாரின் அடிப்படையில் மருத்துவர் காந்தாராஜ், முக்தார் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவர் காந்தாராஜ் மன்னிப்பு கோரியுள்ளார். அதில், “நான் கொடுத்த பேட்டி பல நடிகைகளின் மனதை புண்படுத்தியுள்ளது என்பதை அறிந்தேன். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. இந்தப் பேட்டி கொடுத்ததற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஆர்த்திக்கு 2 முறை நோட்டீஸ்; பாடகி உடன் தொடர்பா? ஜெயம் ரவி விளக்கம்
சென்னையில் பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: மலையாள நடிகை மீதான புகார் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com