Appavu Alleges Vijay Behind Cinema Ticket Racket: ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தி.மு.க. வேட்பாளர் அப்பாவு கூறினார்.
Appavu Alleges Vijay Behind Cinema Ticket Racket: ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தி.மு.க. வேட்பாளர் அப்பாவு கூறினார்.

Published on: April 9, 2026 at 7:42 pm
திருநெல்வேலி, ஏப்.9, 2026; திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு தீவிர வாக்கு சேகரில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் இன்று (வியாழக்கிழமை) திசையன்விளையை அடுத்த நாடார் உவரியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, “30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்றார். இது குறித்து ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “ஆதவ் அர்ஜூனா லாட்டரி சீட்டு விற்கும் நபர். பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் இது நடைபெறுகிறது. பாரதிய ஜனதா கட்சி தயவில் லாட்டரி சீட்டு விற்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.
தி.மு.க. வேட்பாளர் அப்பாவு பேட்டி
Tirunelveli, Tamil Nadu: State Assembly Speaker and DMK Candidate M. Appavu says, "TVK Leader Vijay is not a sincere person. He has documented debts of 12 crore rupees for his wife's food and debts for his sons as well. I don’t know if he is a fit person for politics. He says… pic.twitter.com/nhAmR06eMv
— IANS (@ians_india) April 9, 2026
(நன்றி: ஐ.ஏ.என்.எஸ்)
இவர் (விஜய்) ரூ.1,000 சினிமா டிக்கெட்டை ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்வார். கள்ள மார்க்கெட்டில் சினிமா டிக்கெட் விற்பவர் விஜய். இந்தியா முழுவதும் ஏழைகளிடம் கள்ள லாட்டரி விற்பவர் ஆதவ் அர்ஜூனா குடுமபம். இவர்கள் இருவரும் சேர்ந்து கட்சி ஆரம்பித்து மக்களிடம் வாக்கு கேட்டால், மக்களுக்கு தெரியாம இருக்கா? நம்புவாங்களா? என்றார்.
மேலும், “மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார், நலத்திட்டங்கள் தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்த அப்பாவு, “இந்தத் தொகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்றார்.
இதையும் படிங்க: பிராமண எதிர்ப்பு காலாவதி கொள்கை.. மயிலாப்பூர் த.வெ.க வேட்பாளர் வெங்கட்ரமணன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com