Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
Published on: February 8, 2025 at 5:20 pm
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கடந்த பிப். 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க., உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட வில்லை.
இதனால் திமுகவின் வி.சி.சந்திரகுமாருக்கும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கே. சீதாலட்சுமிக்கும் இடையே இருமுனைப் போட்டி நிலவியது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை 17 சுற்றுகளில் நடைபெறும். ஆரம்ப சுற்றுகளில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீதாலட்சுமி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில் இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமி 23,810 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார். தி.மு.க. வெற்றி பெற்றுள்ளநிலையில் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com