Air India Express flights cancel: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மஸ்கட் மற்றும் சென்னை, திருச்சி இடையேயான விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
Air India Express flights cancel: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மஸ்கட் மற்றும் சென்னை, திருச்சி இடையேயான விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
Published on: February 6, 2025 at 10:32 pm
சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையங்களை பயணிகள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் குறிப்பிட்ட விமான சேவைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
செயல்பாட்டு காரணங்களுக்காக சேவைகள் நிறுத்தப்படுகிறது. வருகிற பிப். 9 2025 முதல் மார்ச் 242025 வரை மஸ்கட் (ஓமன்) இலிருந்து இந்தியாவுக்கான விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ரத்து செய்துள்ளது. சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து விமானங்களை விமான நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட விமானங்களின் விவரங்கள்
பிப். 11 முதல் மார்ச் 25 வரை
சென்னை மற்றும் மஸ்கட் இடையே செவ்வாய்க்கிழமைகளில் IX 0645 மற்றும் IX 0646 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 17 முதல் மார்ச் 17 வரை
திருச்சி மற்றும் மஸ்கட் இடையே திங்கள் கிழமைகளில் IX 0619 மற்றும் IX 0620 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 9, பிப்ரவரி 16 முதல் மார்ச் 16 வரை
திருவனந்தபுரம் மற்றும் மஸ்கட் இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் IX 0549 மற்றும் IX 0550 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிப். 9, பிப்.17 ஆம் தேதி மங்களூர் , மஸ்கட் இடையே IX 0817 மற்றும் IX 0818 விமானம் பிப்ரவரி 24 முதல் மார்ச் 25 வரை ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com