Sellur Raju says DMK will lose in 2026: “திமுக மேடையில் நடிகர் வடிவேலு ஏறிவிட்டார்; இனி ஊத்திக்க போகிறது உறுதி” என்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
Sellur Raju says DMK will lose in 2026: “திமுக மேடையில் நடிகர் வடிவேலு ஏறிவிட்டார்; இனி ஊத்திக்க போகிறது உறுதி” என்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
Published on: March 2, 2025 at 2:09 pm
Updated on: March 2, 2025 at 8:29 pm
மதுரை, மார்ச் 2, 2025: மதுரை மாநகர் அதிமுக சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு புதூர் பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ” திமுக ஆட்சி என்றாலே கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன். இவர்கள் வீட்டுக்குள் சாமி கும்பிடுவார்கள் ஆனால் வெளியே வந்து மாற்றி மாற்றி குழப்பி குழப்பி பேசுவார்கள். இந்த ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை; இது தொடர்ந்தால் பெண்கள் பள்ளிகளுக்கே செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும்.
இதையும் படிங்க: அனைத்து கட்சி கூட்டம்; ஜி.கே வாசன் அதிரடி அறிவிப்பு!
பெண் குழந்தைகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. பெண் சிசுக்கொலையை தடுக்க சட்டம் இயற்றினார். பெண்களின் வாழ்வு உயரவே தன் வாழ்நாள் முழுக்க சபதம் ஏற்று பல திட்டங்களை நிறைவேற்றினார். அதிமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறையை கண்டால் ரவுடிகள் பயந்து அஞ்சி நடுங்கினார்கள்; ஆனால் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது.
மு க ஸ்டாலினை அப்பா என்று கூற சொல்கிறார்கள்; யாராவது அப்படி சொல்வார்களா? அப்படி சொன்னால் அது அசிங்கமாக போய்விடாதா? அம்மா என்றால் அது உணர்வுபூர்வமாக இருக்கும்; அதுவே அப்பா என்றால் அது தவறாக இருக்காதா” என்றார்.
தொடர்ந்து திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ஒரு மருத்துவ கல்லூரி ஆவது தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதா என கேள்வி எழுப்பிய செல்லூர் ராஜு, 2006 இல் திமுக மேடை ஏறி பிரச்சாரம் செய்தார் வடிவேலு; அந்தத் தேர்தலில் திமுகவுக்கு ஊத்திக்கிச்சு. தற்போது மேடை ஏறி மு.க ஸ்டாலின் ஆட்சி தொடரும் என்கிறார்; இனி திமுக ஆட்சி ஊத்திக்கப்போகிறது என்பது உறுதி” என்றார்.
இதையும் படிங்க: இதனை நம்பவோ, ஏற்கவோ வேண்டாம்.. TVK தொண்டர்களுக்கு ஆனந்த் உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com