Durai Murugan hospitalised | தி.மு.க.வின் மூத்தத் தலைவரும், அமைச்சருமான துரை முருகன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Durai Murugan hospitalised | தி.மு.க.வின் மூத்தத் தலைவரும், அமைச்சருமான துரை முருகன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Published on: October 24, 2024 at 8:26 pm
Durai Murugan hospitalised | தி.மு.க. பொதுச்செயலாளரும், மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் மூத்த அமைச்சருமான துரை முருகன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (அக்.24, 2024) பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், வேலூர் காட்பாடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
இவர் தற்போது தமிழ்நாட்டில் நீர்வளத்துறை அமைச்சராக உள்ளார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற துரைமுருகன், 1971ஆம் ஆண்டு முதன் முதலில் எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் பொதுப்பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். 86 வயதான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டார். அப்போது இவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு; திமுக ராஜீவ் காந்தி மீது நடவடிக்கை தேவை: சரத்குமார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com