Kanimozhi: அ.தி.மு.க.வின் அதிகாரம் டெல்லியில் இருக்கிறது என தி.மு.க. எம்.பி கனிமொழி தாக்கிப் பேசினார்.
Kanimozhi: அ.தி.மு.க.வின் அதிகாரம் டெல்லியில் இருக்கிறது என தி.மு.க. எம்.பி கனிமொழி தாக்கிப் பேசினார்.
Published on: September 23, 2025 at 9:06 pm
சென்னை, செப்.23, 2025: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தி.மு.க. எம்.பி கனிமொழி கலந்துகொண்டார். அப்போது, “அ.தி.மு.க.வின் அதிகாரம் டெல்லியில் இருக்கிறது” என விமர்சித்துப் பேசினார்.
தொடர்ந்து பேசிய தி.மு.க. எம்.பி கனிமொழி, “அ.தி.மு.க. அலுவலக கட்டடம் இங்குதான் உள்ளது. ஆனால், அந்த அலுவலகத்தின் அதிகாரம் டெல்லியில் உள்ளது” என்றார்.
என்னதான் கர்சீப் வைத்து..
தொடர்ந்து பேசிய கனிமொழி, “என்னதான் கர்ச்சீப் வைத்து மூடினாலும், முகத்தை மறைத்து சென்றாலும், துடைத்துவிட்டு வந்தாலும் நீங்கள்தான் என்பது பட்டவர்த்தனமாக திகழ்கிறது” என்றார்.
கனிமொழியின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக அணியில் காங்கிரஸூம், அதிமுக அணியில் பா.ஜ.க.வும் உள்ளன.
மேலும், நாம் தமிழர் மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் போட்டியில் உள்ளது. அதேநேரம், பா.ம.க, தே.மு.தி.க, டி.டி.வி தினகரன், ஓ.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் எந்த அணியிலும் சேராமல் மௌனம் காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விஷ வாய்வு தாக்கி தூய்மைப் பணியாளர் மரணம்.. ரூ.40 லட்சம் இழப்பீடு.. அண்ணாமலை வலியுறுத்தல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com