சென்னை அக்டோபர் 3, 2025: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ” பாரதிய ஜனதா கட்சியின் ஏ டீம் தான் திமுக என விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ” நான் தேர்தல் அரசியலுக்கு வந்தால் எனக்கு இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் வாக்கு வந்துவிடும் என்பதால் தான் திட்டமிட்டு நான் பாரதிய ஜனதா கட்சியின் B டீம் என பரப்பினார்கள்; பாரதிய ஜனதா கட்சியின் ஏ டீம் திமுக தான்” என்றார்.
ஆர் எஸ் எஸ் கைக்கூலி திமுக
ஆர் எஸ் எஸ் அமைப்பின் கைக்கூலி திமுக தான்; இருவருக்கும் கொள்கை அளவில் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. இந்த உண்மை நிலையை மக்களிடம் நாங்கள் தான் விளக்கி கூறி வருகிறோம்.
கரூர் சம்பவம் மாசா அல்லது தூசா?
கல்லூரி விழாக்களில் கல்வி பற்றி பேச ஒரு நடிகன் வர வேண்டுமா? கல்வி மாநாட்டில் திரைப்பட இயக்குனர்கள் நடிகர்கள் ஆகியோரை பேச வைக்கிறார்கள்.. கரூர் இறப்புகளில் நம்மை பார்த்து சீனாவும் அமெரிக்காவும் சிரிக்கிறது; விடுதலைக்காக இறந்தவர்களின் மரணத்தில் வரலாறு இருக்கிறது. ஆனால் கரூரில் நடந்தது என்ன? அந்தச் சம்பவம் மாஷா அல்லது தூசா? என்றார்.
இதையும் படிங்க கச்சத் தீவை தாரை வார்த்தவர் கருணாநிதி.. எடப்பாடி பழனிசாமி தாக்கு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்