KS Alagiri : தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு நிகராக எந்தக் கட்சியும் இல்லை என்கிறார் காங்கிரஸ் மூத்தத் தலைவர் கே.எஸ். அழகிரி.
KS Alagiri : தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு நிகராக எந்தக் கட்சியும் இல்லை என்கிறார் காங்கிரஸ் மூத்தத் தலைவர் கே.எஸ். அழகிரி.
Published on: October 5, 2025 at 12:38 pm
சென்னை, அக்.5, 2025: தமிழ்நாட்டில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு இணையாக எந்தக் கட்சியும் இல்லை என காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.
45 சதவீத வாக்குகள்
இது குறித்து அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு 45 சதவீத வாக்குகள் உள்ளன. எங்கள் வாக்கு வங்கிக்கு இணையாக தமிழ்நாட்டில் தற்போது எந்தக் கட்சியும் இல்லை” என்கிறார்.தொடர்ந்து, எங்கள் கூட்டணி இதை விட கூடுதலான வாக்குகளை கூட பெற முடியும் என்றும் கே.எஸ் அழகிரி நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம்
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முடங்கி கிடக்கும் நிலையில் கே.எஸ் அழகிரியிடம் இருந்து இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.கரூர் கூட்ட நெரிசல் மரணங்களை தொடர்ந்து, வழக்குகளை சமாளிக்க அக்கட்சியினர் ஒடி ஒளிந்து வருகின்றனர். அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த் இதுவரை தலைமறைவாக உள்ளார். அவரின் முன்ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதிமுக கூட்டணி
தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளன. திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இடதுசாரிகள், விசிக மற்றும் இஸ்லாமிய கட்சிகளும் உள்ளன.பா.ம.க., தே.மு.தி.க, அ.ம.மு.க உள்ளிட்ட சில கட்சிகள் இன்னமும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :சுயமரியாதை இயக்கத்தின் ஆட்சி.. திராவிட மாடல் தொடரும்.. மு.க ஸ்டாலின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com