MK Stalin: காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்டியது தி.மு.க என மு.க. ஸ்டாலின் தஞ்சாவூரில் பேசினார்.
MK Stalin: காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்டியது தி.மு.க என மு.க. ஸ்டாலின் தஞ்சாவூரில் பேசினார்.
Published on: June 16, 2025 at 6:27 pm
தஞ்சாவூர், ஜூன் 16 2025: தஞ்சாவூரில் பேசிய தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், “தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்” என்றார். தொடர்ந்து, “தஞ்சாவூரையும் கருணாநிதியையும் பிரித்துப் பார்க்க முடியாது என்ற அவர், காவிரி நீரைப் பெற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தவர் கருணாநிதி என்றும் தெரிவித்தார்.
மேலும், “காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது தி.மு.க.தான் என்றும், 2024ல் ரூ.70 கோடியில் தஞ்சாவூரில் டைட்டல் பார்க் கட்டப்பட்டுள்ளது என்றும் கும்பகோணம்- மன்னார்குடி சாலைப் பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன” என்றும் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி மீது தாக்கு
தொடர்ந்து, கூட்டணிப் பிரச்னையை மறைக்க எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக அரசு வெளிப்படைத்தன்மை உடன் செயல்பட்டு வருகிறது.
ஆனால் பெட்டியின் சாவி தொலைந்து விட்டதா என எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்கிறார்.
அவரின் கவனம் முழுவதும் பெட்டியின் மீதுதான் உள்ளது. கூட்டணிப் பிரச்னைகளை தவிர்க்க அரை வேக்காடுதனமாக அவர் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்” எனத் தெரிவித்தார்.
ராஜ ராஜ சோழன் ஆட்சி..
மேலும், மாமன்னர் ராஜ ராஜன் ஆட்சி செய்த சோழ நாட்டின் காற்றை சுவாசிக்கும் போது ஒரு கம்பீரம் பிறக்கிறது” என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : விஜய் பிறந்தநாளில் கொள்கை விளக்க கூட்டம்.. தமிழக வெற்றி கழகம் அதிரடி.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com