மேகதாது, தமிழக எல்லை ஆக்கிரமிப்பு.. மாநில உரிமையை விட்டுக் கொடுத்துதான் கூட்டணியா? திமுகவுக்கு டிடிவி தினகரன் கேள்வி

Dhinakaran Questions Stalin : மாநில உரிமையை விட்டுக் கொடுத்துதான் திமுக கூட்டணி அமைத்துள்ளதா என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Published on: March 7, 2026 at 9:09 pm

Updated on: March 7, 2026 at 9:13 pm

சென்னை மார்ச் 7 2026; மேகதாது விவகாரம் மற்றும் தமிழக எல்லை ஆக்கிரமிப்பு பிரச்சனைகளை குறிப்பிட்டு டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்; அந்த அறிக்கையில் திமுக மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்துதான் கூட்டணி அமைத்துள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,”திமுகவுடனான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களிலேயே கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாதுவில் அணைக்கட்டுவதில் தீவிரம் காட்டுவதும், தமிழகத்தின் எல்லைப் பகுதியை கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஆக்கிரமிக்க முயல்வதையும் பார்க்கும் போது, திமுக அரசு மாநில உரிமையை விட்டுக் கொடுத்து தான் தேர்தல் கூட்டணியை உறுதிபடுத்துகிறதா? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தமிழகத்தின் எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் தாளூரில் அத்துமீறி வைக்கப்பட்டிருக்கும் கேரள அரசின் அறிவிப்புப் பலகையை உடனடியாக அகற்றுவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் எல்லைக் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனவும் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க; குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500.. திருமணத்தின் போது ஒரு பவுன் தங்கம்.. விஜய் அறிவிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com