பெரியார் மீதான விமர்சனம்: பல்வேறு இடங்களில் 50 வழக்குகள் பதிவு.. ஐகோர்ட்டில் சீமான் மனு!

Criticism against Periyar: பெரியாருக்கு எதிரான கருத்துகளுக்காக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்களை இணைக்க கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Published on: March 18, 2025 at 11:45 am

Updated on: March 18, 2025 at 11:47 am

சென்னை, மார்ச் 18. 2025: நாம் தமிழர் கட்சி (NTK) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (58), திராவிடர் கழக (DK) நிறுவனர் தந்தை பெரியார் என்ற ஈ.வி. ராமசாமிக்கு எதிரான தனது பேச்சுக்காக மாநிலம் முழுவதும் வழக்குகளை எதிர்கொண்டார். இந்நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.களை இணைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு செவ்வாய்க்கிழமை (மார்ச் 18, 2025) நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், . சீமான், கடலூர் மாவட்டம் வடலூரில் ஜனவரி 8, 2025 அன்று பெரியாரை விமர்சித்து உரையாற்றியதாகவும், அவரது பேச்சு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீமான் மீது குறிப்பிட்ட ஒரு அமைப்பை சார்ந்தவர்கள், ஈரோடு, மதுரை, கிருஷ்ணகிரி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, கோவை, தேனி, சிவகங்கை மற்றும் பல மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.

இதே உரைக்காக இதுவரை பதிவு செய்யப்பட்ட 50 முதல் தகவல் அறிக்கைகளையும் பட்டியலிட்டு, பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 35 இன் கீழ் நோட்டீஸ் பெறப்பட்டுள்ளதாகவம் சீமான் கூறியுள்ளார். மேலும், தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட புகார்களின் சரியான தன்மை குறித்த விவரங்களை வெளியிட காவல்துறை மறுத்துவிட்டதாகவும் சீமான் தனது பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க டாஸ்மாகில் ரூ.1000 கோடி தான் முறைகேடா? சீமான் பரபரப்பு கேள்வி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com