MP Jothimani: தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்வதாக வேதனை தெரிவித்துள்ளார், காங்கிரஸ் எம்.பி, ஜோதிமணி.
MP Jothimani: தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்வதாக வேதனை தெரிவித்துள்ளார், காங்கிரஸ் எம்.பி, ஜோதிமணி.

Published on: January 2, 2026 at 8:56 pm
சென்னை, ஜன 2, 2025: தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது என வேதனையாக தெரிவித்துள்ளார் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.
ராகுல் காந்தியை ஏமாற்றுகின்றனர்
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி, ” தமிழ்நாடு காங்கிரஸில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை; கட்சியில் எழுந்துள்ள உள்கட்சி பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளன.
தலைவர் ராகுல் காந்தியின் நேர்மையான அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் பயணிக்கிறது. அவரது கடின உழைப்புக்கும் நேர்மைக்கும் நாம் துரோகம் இழைக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, ” தமிழக காங்கிரசை பொருத்தமட்டில் கொஞ்சம் கொஞ்சமாக அழிவு பாதையில் பயணித்து வருகிறது” எனவும் ஜோதிமணி எம்பி சுட்டிக்காட்டி உள்ளார்.
தமிழக காங்கிரஸில் உள்கச்சி பிரச்சனை மீண்டும் தலை தூக்கி உள்ளது. கட்சியின் நிர்வாகிகள் சிலர் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி முறித்துக் கொண்டு, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணியை தொடர வேண்டும் என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் செல்வ பெருந்தகையிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அப்போது அவர் இது தொடர்பாக எந்த ஒரு கோரிக்கையும் இதுவரை எழவில்லை; காங்கிரஸ் திமுக கூட்டணி எஃகு கோட்டை போல் வலிமையாக உள்ளது என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; ஆசிரியர்கள் மீதான கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.. அன்புமணி ராமதாஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com