Special Trains | கோவை- தன்பாத் சிறப்பு ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Special Trains | கோவை- தன்பாத் சிறப்பு ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: November 2, 2024 at 8:59 am
Special Trains | தீபாவளி மற்றும் சாத் பூஜை கொண்டாட்டங்களை தொடர்ந்து இந்திய ரயில்வே நாடு முழுக்க பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயிவ்களை அறிவித்துள்ளது. பண்டிகைக் கூட்டத்தை சமாளிக்க, ரயில்வே வியாழக்கிழமை 160 சிறப்பு ரயில்களை இயக்கியது. அதே நேரத்தில் மேலும் 170 ரயில்கள் மறுநாள் இயக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டது. மேலும், டெல்லி, மும்பை, அகமதாபாத், சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து பீகார் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற அதிக தேவை உள்ள இடங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
இது குறித்து இந்திய ரயில்வே அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், “சத் பூஜைக்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெரிசலைக் குறைக்க நாங்கள் சிறப்பு ரயில்களை இயக்குகிறோம்” என்றார். மேலும், “கூட்டத்தை நிர்வகிக்க அரசு ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி) மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) போலீசார் கூடுதலாக பணி அமர்த்தப்படுவார்கள்” என்றார்.
கோவை- தன்பாத் சிறப்பு ரயில் மாற்றம்
இந்த நிலையில், வண்டி எண் 03326 கோவை- தன்பாத் சிறப்பு ரயில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் கோயம்புத்தூரில் இருந்து நவ.2ஆம் தேதி மதியம் 12.55க்கு புறப்பட இருந்தது. தற்போது, நவ.3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.15க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ரயில் 11 மணி 20 நிமிடம் தாமதமாக புறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தீபாவளி 2024; திண்டுக்கல்- கோவை சிறப்பு ரயில்: நேரம், தேதி செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com