Chennai Weather Report (Jan 10, 2026): சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Chennai Weather Report (Jan 10, 2026): சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Published on: January 10, 2026 at 7:55 pm
சென்னை ஜனவரி 10, 2026; சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கையும்; மற்ற ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி,” மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ” ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று கன மழை பெய்யக்கூடும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வட தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மற்றும் தென் மாவட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுவர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 2 கோடி ரேஷன் அட்டைதாரர்கள்.. பொங்கல் கிப்ட் ₹3,000 வாங்கியாச்சா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com