Traffic Diversion Announced in Chennai : சென்னையில் மே்பால பணிகள் காரணமாக, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகள் என்பதை நோட் பண்ணுங்க.
Traffic Diversion Announced in Chennai : சென்னையில் மே்பால பணிகள் காரணமாக, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகள் என்பதை நோட் பண்ணுங்க.

Published on: June 5, 2026 at 11:55 am
சென்னை, ஜுன் 5, 2026: சென்னையின் ஆர்.கே.நகர் ரயில்வே நிலைமட்டக் கடவை அருகே புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெறுவதால், வரும் ஜூன் 6ஆம் தேதி சனிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். அதன்படி, வைத்தியநாதன் பாலம் முதல் ஆர்.கே.நகர் சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படுகிறது.
இதனால், ஐ.ஓ.சி.எல் நோக்கிச் செல்லும் வாகனங்கள் வைத்தியநாதன் மேம்பாலத்தில் இடப்புறம் திரும்பி, டி.ஹெச் சாலையில் சென்று கொருக்குப்பேட்டை சந்திப்பை அடைய வேண்டும்.
அதேபோல், ஆர்.கே.நகர் புதிய மேம்பாலத்திலிருந்து ஐ.ஓ.சி.எல் நோக்கிச் செல்லும் கனரகம் அல்லாத வாகனங்கள் ஆர்.கே.நகர் சந்திப்பில் வலப்புறம் திரும்பி, கொருக்குப்பேட்டை ரயில்வே கடவை வழியாக டி.ஹெச் சாலையில் சென்று, வைத்தியநாதன் மேம்பாலத்தில் வலப்புறம் திரும்பி ஐ.ஓ.சி.எல் சந்திப்பை அடைய வேண்டும்.
தொடர்ந்து, மீனாம்பாள் மேம்பாலம் வழியாக ஐ.ஓ.சி.எல் நோக்கிச் செல்லும் கனரகம் அல்லாத லேசான வாகனங்கள் கே.என்.எஸ் டெப்போவில் வலப்புறம் அல்லது ஆர்.கே.நகர் சந்திப்பில் இடப்புறம் திரும்பி, சுண்ணாம்பு கால்வாய் சாலை வழியாக சென்று ஐ.ஓ.சி.எல் சந்திப்பை அடைய வேண்டும்.
மேலும், மூலக்கோத்தளம் வழியாக ஐ.ஓ.சி.எல் நோக்கிச் செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் மின்ட் சந்திப்பை நேராகச் சென்று, அங்கிருந்து இடப்புறம் திரும்பி கண்ணன் ரவுண்டாப் வழியாக டி.ஹெச் சாலை மற்றும் வைத்தியநாதன் மேம்பாலம் வழியாக ஐ.ஓ.சி.எல் சந்திப்பை அடைய வேண்டும்.
தொடர்ந்து, மூலக்கோத்தளம் வழியாக ஐ.ஓ.சி.எல் நோக்கிச் செல்லும் லேசான வாகனங்கள் ஆர்.கே.நகர் சந்திப்பில் இடப்புறம் திரும்பி, சுண்ணாம்பு கால்வாய் சாலை மற்றும் அன்னை சத்தியா நகர் வழியாகச் சென்று ஐ.ஓ.சி.எல் சந்திப்பை அடைய வேண்டும். இந்த மாற்று வழிகள், மேம்பாலம் கட்டும் பணிகள் முடியும் வரை அமலில் இருக்கும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : சென்னை; தீயில் கருகிய 100 கார்கள்.. பள்ளிக்கரணையில் என்ன நடந்தது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com