சென்னை கொளத்தூரில் ஏ.சி பேருந்து நிலையம்.. ரூ.1.6 கோடி மதிப்பீடு.. மு.க ஸ்டாலின் திறப்பு!

M.K. Stalin: ரூ.1.6 கோடி மதிப்பிலான ஏ.சி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்துவைத்தார்.

Published on: February 23, 2026 at 2:45 pm

சென்னை, பிப்.23, 2026: சென்னை கொளத்தூரில் ரூ.1.6 கோடியில் ஏசி பேருந்து நிறுத்தத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில், குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை, கழிப்பறை, குடிநீர் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பேருந்து நிறுத்தத்தில் செய்யப்பட்டுள்ளன மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, பயணியர் நிழற்குடை ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிலையில், கொளத்தூரில் இந்து சமய அறநிலையத்துறையின் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்துவைத்தார். தொடர்ந்துப் பேசிய அவர், “என்னை நினைத்து நானே பெருமைக்கொள்ளக்கூடிய நாள் இன்று; சிறந்த கல்லூரியை திறந்துவைத்திருக்கிறேன் மாணவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான், அது ‘கல்விதான் கடவுள்” என்றார்.

மேலும், “கல்வி எனும் கடவுள் உங்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.

இதையும் படிங்க: தி.மு.க கூட்டணியில் தனிச்சின்னம்.. முரண்டு பிடிக்கும் ம.தி.மு.க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com