Chennai Gummidipoondi Train | சென்னை- கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் ரயிலை கவிழ்க்க சதி நடந்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Chennai Gummidipoondi Train | சென்னை- கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் ரயிலை கவிழ்க்க சதி நடந்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Published on: September 21, 2024 at 1:13 pm
Chennai Gummidipoondi Train | சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும், அதிகாலை 2 மணி நேரம் ரயில்சேவை பாதிக்கப்பட்டது. இங்கு ஏற்கனவே இதுபோன்ற சம்பவம் ஒன்று ஏற்கனவே நடந்துள்ளது.
அதாவது, இங்கு, 4 நாட்களுக்கு முன் தண்டவாள இணைப்பு கம்பிகள் அவிழ்க்கப்பட்டு சிதறி கிடந்துள்ளன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், தற்போது, தண்டவாளத்தில் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, வடமாநிலங்களை இணைக்கும் சென்னை – கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் ரயிலை கவிழ்க்க சதியா? என போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இருவேறு சம்பவங்கள் குறித்தும் 2 தனிப்படைகள் அமைத்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் விசாரணை நடத்திவருகின்றனர் என்பது குறிப்பித்தக்கது.
இதையும் படிங்க : ‘அந்தப் படத்தை இன்னமும் மக்கள் மறக்கல’: சீமான் சொன்ன தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com