விஜய் இன்று டெல்லி பயணம்.. நாளை சிபிஐ விசாரணை!

Karur stampede case: கரூர் கோட்டை நெரிசல் மரணம் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது; இந்த வழக்கில் மார்ச் 15ஆம் தேதி நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் மூன்றாவது முறையாக ஆஜராகிறார்.

Published on: March 14, 2026 at 10:18 am

புதுடெல்லி மார்ச் 14, 2026; நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் இன்று டெல்லி செல்கிறார்; கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக, சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் விசாரணைக்கு ஆஜராக, விஜய் தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். டெல்லியில் தனியார் ஹோட்டலில் தங்கும் அவர், நாளை (மார்ச் 15 2026) விசாரணைக்கு ஆஜராகிறார்.

சிபிஐ அதிகாரிகள் நடிகர் விஜய் இடம் ஏற்கனவே இருமுறை விசாரணை நடத்தியுள்ளார்கள்; இந்த நிலையில் நாளை மூன்றாவது முறையாக அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் மரணம்

2025 செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பேரதிர்ச்சியான கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் என 41 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தார்கள்; 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில், சிபிஐ ஜனவரியில் விஜயை இரண்டு முறை விசாரித்தது. மார்ச் 9ஆம் தேதி மீண்டும் நடிகருக்கு சம்மன் அனுப்பியிருந்தது; இந்த நிலையில் அவர் மார்ச் 15ஆம் தேதி விசாரணைக்காக மூன்றாம் முறையாக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா.!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com