Vanathi Srinivasan: திமுக கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பொன்முடி; அமைச்சரவையில் தொடரலாமா என பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
Vanathi Srinivasan: திமுக கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பொன்முடி; அமைச்சரவையில் தொடரலாமா என பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
Published on: April 24, 2025 at 7:04 pm
கள்ளக்குறிச்சி, ஏப்ரல் 24 2025: தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவ மதங்கள் குறித்து அவதூறாக பேசினார் என புகார்கள் எழுந்தன. தந்தை பெரியார் திராவிட கழகத்தின் விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, விலைமாதரின் கதையை கூறி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அந்த வீடியோவில் அமைச்சர் பொன்முடி சிரித்துக்கொண்டே விலை மாதருடன் ஒப்பிட்டு சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன் வைத்தார்.
முன்னதாக இங்கு பெண்கள் இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டு இந்த கதையை பொன்முடி பேசினார். இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் தனது பேச்சுக்கு பொன்முடி வருத்தம் தெரிவித்தார். இதற்கிடையில் அமைச்சர் பொன்முடியின் கருத்துக்கு திமுக கனிமொழி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் அவரைக் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கி திமுக தலைவர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : Pahalgam terror attack: திடீரென கேட்ட துப்பாக்கி சப்தம், விழுந்த உடல்கள்; இந்து பேராசிரியர் தப்பியது எப்படி?
இதற்கிடையில் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக பாஜக, உட்பட பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் பொன்முடியை பதவி நீக்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிறுத்தம் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது பொன்முடி பேசிய தவறான பேச்சுகளுக்காக அவர் கட்சியின் நிர்வாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தனது பேச்சுக்காக கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் அமைச்சராக மட்டும் தொடரலாமா? என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்: பட்டியல் தயார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com