TTV Dinakaran Bakrid greetings: இறைவனின் விருப்பத்திற்கு கீழ்படிந்து நடப்பதே வாழ்க்கையின் உண்மையான நெறி என டி.டி.வி தினகரன் தனது பக்ரீத் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
TTV Dinakaran Bakrid greetings: இறைவனின் விருப்பத்திற்கு கீழ்படிந்து நடப்பதே வாழ்க்கையின் உண்மையான நெறி என டி.டி.வி தினகரன் தனது பக்ரீத் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Published on: June 6, 2025 at 8:11 pm
சென்னை, ஜூன் 6 2025: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தியில், “தியாகத்தை போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை கொண்டாடி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “இறைவனின் விருப்பத்திற்கு கீழ்படிந்து நடப்பதே வாழ்க்கையின் உண்மையான நெறி என்பதை உலகிற்கு பறைசாற்றும் இந்நாளில் ஏழை, எளியோருக்கு உதவி செய்தல், தவறிழைப்போரை மன்னித்தல், பகமையை நீக்குதல், தானம் தர்மம் செய்தல் போன்ற திருக்குரானின் உயரிய போதனைகளை பின்பற்றி, ஒற்றுமையோடும், சகோதரத்துவத்தோடும் வாழ்ந்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இறை நம்பிக்கை உள்ளவர்கள் எத்தகைய தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தை எடுத்துரைக்கும் இப்புனித திருநாளில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் மலரட்டும் என வாழ்த்தி மீண்டும் ஒருமுறை எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : தேசிய தடய அறிவியல் தேர்வு தேதியை மாற்ற வேண்டும்; ஜவாஹிருல்லா கோரிக்கை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com