P K Sekar Babu: சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் பவன் கல்யாண் வெற்றிப் பெற்று காட்டட்டும்; பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு என வினாயெழுப்பியுள்ளார் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு.
P K Sekar Babu: சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் பவன் கல்யாண் வெற்றிப் பெற்று காட்டட்டும்; பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு என வினாயெழுப்பியுள்ளார் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு.
Published on: June 23, 2025 at 3:56 pm
சென்னை ஜூன் 23 2025; தமிழக இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரை முருக பக்தர்கள் மாநாடு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும் அதிமுகவினர் இதில் கலந்து கொண்டிருக்கக் கூடாது என கூறிய அமைச்சர் சேகர்பாபு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும் தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் இடையே போட்டி இருப்பதாகவும்; இந்தப் போட்டியின் காரணமாக தான் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
சென்னையில் போட்டியிடுவாரா பவன் கல்யாண்?
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பவன் கல்யாண் குறித்த கேள்விக்கு காட்டமுடன் பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, ‘ ஆந்திராவின் துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கும் தமிழ் நாட்டுக்கும் என்ன தொடர்பு? சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு பவன் கல்யாண் வெற்றி பெறுவாரா? அவ்வாறு பவன் கல்யாண் வெற்றி பெற்று காட்டட்டும்; பின்னர் அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
பாஜகவுக்கு இம்முறை..
தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சிக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதி கூட கிடைக்காது எனக் கூறிய அமைச்சர் சேகர்பாபு, கடந்த முறை வேல் யாத்திரை நடத்தியதற்காக பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் கிடைத்தார்கள்; இந்த முறை வெறும் மாநாடு தான் நடத்தியுள்ளார்கள்.ஆக பாஜகவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இம்முறை பூஜ்ஜியத்தை வழங்குவார்” என்றார்.
இதையும் படிங்க: மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை.. தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com