Anbumani Ramadoss: பச்சைப்பயறு கொள்முதல் நிறுத்தப்பட்டதால் உழவர்கள் பாதிப்படைந்துள்ளனர் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: பச்சைப்பயறு கொள்முதல் நிறுத்தப்பட்டதால் உழவர்கள் பாதிப்படைந்துள்ளனர் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Published on: May 14, 2025 at 12:49 pm
சென்னை, மே 14 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பச்சைப்பயறு சாகுபடி மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவற்றை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் கொள்முதல் செய்ய தமிழக அரசு மறுப்பதால் உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
ஒருபுறம் பச்சைப்பயறு சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்று உழவர்களுக்கு அறிவுரை கூறும் தமிழக அரசு, இன்னொருபுறம் விளைவித்த பச்சைப்பயிறை கொள்முதல் செய்ய மறுப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழ்நாட்டில் கடந்த 2021-22ஆம் ஆண்டில் 4250 டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட்டது; 2022-23ஆம் ஆண்டில் இது 12,605 டன்களாக அதிகரித்தது. ஆனால், கடந்த ஆண்டில் 1,860 டன்களாகவும், நடப்பாண்டில் 1440 டன்களாகவும் குறைக்கப்பட்டு விட்டதை ஏற்க முடியாது.
இது உழவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். இது மத்திய அரசின் திட்டம் என்று கூறி தமிழக அரசு தப்பித்து விட முடியாது. தமிழகத்திலிருந்து பச்சைப்பயறை அதிக அளவில் கொள்முதல் செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு சாதித்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் இழப்பை சந்தித்து கடன் வலையில் சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதைத் தடுக்க மத்திய அரசிடம் பேசி கொள்முதல் அளவை குறைந்தது 5 மடங்கு, அதாவது 7,000 டன்களாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழக அரசே அதன் சொந்த செலவில் பச்சைப் பயறை உச்சவரம்பின்றி கொள்முதல் செய்து உழவர்களின் துயரத்தைப் போக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : குற்றவாளிகளை கண்டறிவதில் அலட்சியம்; தி.மு.க. அரசுக்கு டி.டி.வி தினகரன் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com