Anbumani Ramadoss: “கடன் ரூ.9.55 லட்சம் கோடி, 2024 -25இல் வட்டி ரூ.62,456 கோடி: 4 ஆண்டாக கடன், வட்டியில் தமிழகம் முதலிடம்- திமுகவின் இன்னொரு சாதனை” என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: “கடன் ரூ.9.55 லட்சம் கோடி, 2024 -25இல் வட்டி ரூ.62,456 கோடி: 4 ஆண்டாக கடன், வட்டியில் தமிழகம் முதலிடம்- திமுகவின் இன்னொரு சாதனை” என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: December 20, 2025 at 11:46 am
சென்னை டிசம்பர் 20,2025; பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (சனிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு கடன் மற்றும் வட்டியில் முதலிடம் வகிப்பதாக தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும்,”இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலிலும், அதிக வட்டி செலுத்தும் மாநிலங்கள் பட்டியலிலும் தொடர்ந்து நான்காம் ஆண்டாக முதலிடம் பிடித்திருக்கிறது தமிழ்நாடு. மாநிலத்தின் நிதி மேலாண்மையை திமுக அரசு எந்த அளவுக்கு சிதைத்து வைத்திருக்கிறது என்பதற்கு இது தான் வேதனையான எடுத்துக்காட்டு ஆகும்.
2024&-25ஆம் ஆண்டின் இறுதியில் தமிழ்நாட்டின் மொத்தக்கடன் ரூ. 9 லட்சத்து 55,690 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் மிகவும் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படுவதும், மக்கள்தொகை மற்றும் நிலப்பரப்பில் பெரிய மாநிலமுமான உத்தரப்பிரதேசம் கூட அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலில் ரூ. 8.57 லட்சம் கோடி கடனுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமாகக் கருதப்படும் மராட்டியம் ரூ.8.12 லட்சம் கோடி கடனுடன் மூன்றாவது இடத்திலும் தான் உள்ளன.
இதையும் படிங்க; வேளாண் துறை வீழ்ச்சி.. கொண்டாட்டம்நடத்தும் மோசடி திமுக அரசின் பதில் என்ன? அன்புமணி ராமதாஸ்
அதிலும், தமிழகத்திற்கும், உத்தரப்பிரதேசத்திற்கும் இடையிலான கடன் வித்தியாசம் சுமார் ரூ.1 லட்சம் கோடி என்பதிலிருந்தே தமிழ்நாடு அரசு எவ்வளவு மோசமான கடன் வலையில் சிக்கியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
மேலும்,”கடந்த 55 மாதங்களாக வேதனைகளை மட்டுமே மக்களுக்கு பரிசாக அளித்து வரும் திமுக அரசு, சாதனைகளை படைத்து விட்டதாகக் கூறி மக்களின் வரிப்பணத்தில் கொண்டாட்டங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. திமுகவின் இலக்கணப்படிப் பார்த்தால் அதிக கடன்களை வாங்கிக் குவிப்பதிலும், அதற்காக அதிக வட்டியை செலுத்துவதிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றியிருப்பது கூட ஒரு வகையில் சாதனை தான். இப்படி ஒரு சாதனை படைத்ததற்காக திமுக வெட்கித் தலைகுனிய வேண்டும்.
ஒரு மாநிலத்தின் நிதி நிர்வாகம் எவ்வாறு இருக்கக் கூடாது என்பதற்கான எடுத்துக்காட்டு தான் திமுகவின் ஆட்சி ஆகும். தமிழ்நாட்டு மக்களுக்கு விடியலைத் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, பெரும் இருளைத் தான் கொடுத்திருக்கிறது. இந்த இருளுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் முடிவு கட்டுவர். திமுக ஆட்சி அகற்றப்ப்பட்ட பிறகு தமிழக மக்களின் வாழ்வில் உண்மையான வெளிச்சம் பரவும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க; வாக்காளர் சிறப்பு திருத்த வரைவு பட்டியல் வெளியீடு.. அமமுக நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com