பனங்கற்கண்டுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி.. அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு!

Anbumani Ramadoss: பனங்கற்கண்டுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Published on: March 12, 2026 at 1:53 pm

Updated on: March 12, 2026 at 2:13 pm

சென்னை மார்ச் 12, 2026; “தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பனங்கற்கண்டுகளில் தூய்மைப்படுத்தப்பட்ட சர்க்கரை அதிக அளவில் சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றை செயற்கையாக தூய்மைப்படுத்தப்பட்ட சர்க்கரைக் கட்டிக்கு இணையான பொருளாகக் கருதி 18% விதிக்கப்படும் என்று ஜி.எஸ்.டி ஆணையரகம் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மத்திய அரசு வகுத்திருக்கும் ஜி.எஸ்.டி வரிக்கொள்கைக்கு எதிரானது ஆகும்.

தமிழ்நாட்டில் பனைமரத்தில் இருந்து உருவாகும் பதநீரைக் கொண்டு தான் பனங்கற்கண்டு தயாரிக்கப் படுகிறது. ஜி.எஸ்.டி வரி விகிதத்தில் பனங்கற்கண்டு எச்.எஸ்.என் குறியீடு17029010 ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவில் உள்ள சில பொருள்களுக்கு 18% ஜி.எஸ்.டி வசூலிக்கப்படாலும், பனங்கற்கண்டுக்கு 5% மட்டுமே வரி வசூலிக்கப்பட வேண்டும்.

ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் பனங்கற்கண்டை எச்.எஸ்.என் குறியீடு17029090 ஆக வகைப்படுத்தியுள்ள சென்னை ஜி.எஸ்.டி ஆணையரகம், இனிமேல் பனங்கற்கண்டுக்கு 18% வரி செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது. இது அநீதியானதாகும்” என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி கொடூர கொலை..6 தனிப்படைகள் அமைப்பு

தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை படுகொலை.. பெண்கள் எப்படி சுதந்திரமாக நடக்க முடியும்? டிடிவி தினகரன்! TTV Dinakaran

தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை படுகொலை.. பெண்கள் எப்படி சுதந்திரமாக

மேற்கு ஆசியாவில் பணிபுரியும் 593 தமிழக மீனவர்கள்.. மீட்பதில் சிக்கல், நீதிமன்றத்தில் மத்திய அரசு! Madurai High Court

மேற்கு ஆசியாவில் பணிபுரியும் 593 தமிழக மீனவர்கள்.. மீட்பதில் சிக்கல், நீதிமன்றத்தில் மத்திய

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com