Anbumani Ramadoss: பழைய ஓய்வூதியத் திட்டம்: ககன்தீப் சிங் குழு இதுவரை செய்த பணிகள் என்ன? ஊழியர்களை ஏமாற்றுவதே அரசு வேலையா? என கேள்வியெழுப்பியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.
Anbumani Ramadoss: பழைய ஓய்வூதியத் திட்டம்: ககன்தீப் சிங் குழு இதுவரை செய்த பணிகள் என்ன? ஊழியர்களை ஏமாற்றுவதே அரசு வேலையா? என கேள்வியெழுப்பியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.
Published on: June 22, 2025 at 1:19 pm
சென்னை, ஜூன் 22 2025: பழைய ஓய்வூதியத் திட்டம்: ககன்தீப் சிங் குழு இதுவரை செய்த பணிகள் என்ன? என கேள்வியெழுப்பியுள்ளார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பதவிக்காலத்தில் பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்ட நிலையில், அதன் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதில் அரசு ஊழியர்களை திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பணி வரம்புகள் அறிவிக்கப்பட்டு விட்டதாக நிதித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். எனினும், பணி வரம்புகள் இன்று வரை மக்களின் பார்வைக்கு வைக்கப் படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா? அல்லது வேறு வகையான திட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமா? என்பதை சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களுடன் விவாதித்து தான் முடிவெடுக்க முடியும்.
ஆனால், அதற்கான கலந்தாய்வுக் கூட்டங்கள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை. குழுவின் உறுப்பினர்களாக இருக்கும் மூன்று அதிகாரிகளும் இதுவரை ஒன்று கூடி தங்களுக்கான திட்டத்தின் நோக்கம் குறித்து விவாதித்தார்களா? என்பது கூட தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “இந்தியாவில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. அந்த மாநிலங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை விட மிகவும் மோசமான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் தான்.
தமிழக அரசுக்கு மனமிருந்தால், அங்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப் படுகிறது என்பதை ஒரு வாரத்தில் அறிந்து தமிழகத்திலும் செயல்படுத்த முடியும். ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் மனம் அரசு ஊழியர்களை ஏமாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறது.
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களை இனியும் ஏமாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால், தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுகவை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும், மக்களும் ஏமாற்றுவது உறுதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : 30,000 பேருக்கு ரூ.3000 வரை ஊதியம் சுரண்டல்.. அன்புமணி பகீர் புகார்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com