Anbumani Ramadoss: திமுக ஆட்சியில் கொலைகள் குறைவாக நடந்திருப்பதாக பொய்யான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
March 13, 2026
Anbumani Ramadoss: திமுக ஆட்சியில் கொலைகள் குறைவாக நடந்திருப்பதாக பொய்யான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: March 13, 2026 at 11:28 am
சென்னை, மார்ச் 13 2026: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கொலைகள் உள்ளிட்ட குற்றங்கள் குறைந்து விட்டதாக அதிகாரிகளை வைத்து திமுக அரசு விளக்கமளிக்க வைத்திருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களைப் போலவே, எந்த ஆதாரங்களும் இல்லாமல் பொய்யான புள்ளிவிவரங்களைக் கொண்டு திமுக ஆட்சியின் சீரழிவுகளைத் தடுக்க அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி படுதோல்வியில் முடிவடைந்திருக்கிறது. திமுக ஆட்சியின் அவலங்கள் மக்களை நேரடியாகத் தாக்கும் நிலையில், அவற்றை இனி திரை போட்டு மறைக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற கொலைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தன்னிச்சையாக தயாரித்து வெளியிடுவதில்லை. தமிழக அரசு தரும் புள்ளிவிவரங்களைத் தொகுத்து தான் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஒவ்வொரு ஆண்டும் ‘‘இந்தியாவில் நடந்த குற்றங்கள்’’ என்ற தலைப்பில் ஆவணமாக வெளியிடுகிறது.
இதையும் படிங்க: ரஜினியை மிரட்டியது திமுக.. அதனால் தான் அவர்.. ஆதவ் அர்ஜுனா!
குற்றங்கள் தொடர்பான தரவுகளுக்கு அது தான் ஆகச்சிறந்த ஆவணம் ஆகும். இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்தும் கூட, திமுக ஆட்சியை காப்பாற்றுவதற்காக நேர்மையான அதிகாரிகள் என்று பெயரெடுத்த உள்துறை செயலாளரும், காவல்துறை பொறுப்பு தலைமை இயக்குனரும் பொய்யான புள்ளிவிவரங்களைத் தரக்கூடாது. அது அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2021, 2022, 2023 ஆகிய காலண்டர் ஆண்டுகளில் வெளியான குற்றங்களைத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தொகுத்து வெளியிட்டிருக்கிறது. அந்த 3 ஆண்டுகளிலுமே முந்தைய அதிமுக ஆட்சியின் முதல் மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற கொலைகளுடன் ஒப்பிட்டால், அனைத்து ஆண்டுகளிலுமே கொலைகளில் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை.
மேற்கண்ட புள்ளிவிவரங்களுக்கான ஆதாரங்களாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட ஆவணங்களை இணைத்திருக்கிறேன். திமுக ஆட்சியில் கொலைகள் உள்ளிட்ட குற்றங்கள் குறைந்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர் அவர்களோ, அமைச்சர்களோ, அதிகாரிகளோ இது குறித்து விவாதம் நடந்த விரும்பினால், அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். அதற்கு மாறாக, மக்களை ஏமாற்றும் நோக்குடன் பொய்யான புள்ளிவிவரங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்ற முயல்வது அழகல்ல என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இடிந்தகரையைச் சேர்ந்த 43 மீனவர்களை மீட்டு தருக.. திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ் கோரிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com