Diwali Bonous demand: “போக்குவரத்துக் கழகங்கள், பொதுத்துறை ஊழியர்களுக்கு 25% தீபஒளி போனசை உடனடியாக அரசு வழங்க வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Diwali Bonous demand: “போக்குவரத்துக் கழகங்கள், பொதுத்துறை ஊழியர்களுக்கு 25% தீபஒளி போனசை உடனடியாக அரசு வழங்க வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Published on: October 3, 2025 at 11:02 pm
சென்னை, அக்.3, 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை (அக்.3, 2025) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தீப ஒளித் திருநாள் வரும் 20&ஆம் நாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அதைக் கொண்டாடுவதற்கு வசதியாக போக்குவரத்துக்கழகங்கள், மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு இதுவரை மிகை ஊதியம் எனப்படும் போனஸ் அறிவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
உழைக்கும் வர்க்கத்தினரின் நலனின் தங்களுக்கு அக்கறை இல்லை என்பதை திமுக அரசு இதுபோன்று தான் நிரூபித்துக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழ்நாட்டில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் கடந்த 21 ஆண்டுகளாகவே அதிகபட்சமாக 20% மிகை ஊதியம் மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கான மிகை ஊதியம் என்பது அவர்களின் மொத்த ஊதியத்தை கணக்கிட்டு வழங்கப்படுவதில்லை. மாறாக மிகை ஊதியக் கணக்கீட்டுக்கான ஊதிய உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, அதன் ஆண்டு சராசரியிலிருந்து தான் 20% மிகை ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
ஊதிய உயர்வு
கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே தொகையே மிகை ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு மிகை ஊதியத்தின் அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாலும் அதை அரசு ஏற்கவில்லை.
பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு நடப்பாண்டிலாவது தீப ஒளித் திருநாள் மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு நடப்பாண்டில் மிகை ஊதியத்தின் அளவை 25% ஆக உயர்த்த வேண்டும்; அது அடுத்த இரு நாள்களில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : பாரதிய ஜனதா கட்சியின் ‘A’ டீம் திமுக.. சீமான் அதிரடி அட்டாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com