Adhav Arjuna interview in Dehradun : “நீதியை வெளிக்கொணர உழைத்து வருகிறோம். உண்மை வெளிவரும்” என ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
Adhav Arjuna interview in Dehradun : “நீதியை வெளிக்கொணர உழைத்து வருகிறோம். உண்மை வெளிவரும்” என ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
Published on: October 4, 2025 at 11:15 am
டேராடூன், அக்.4, 2025: தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும், இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவருமான ஆதவ் அர்ஜூனா, கூடைப்பந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ளார்.
இந்த நிலையில், டேராடூன் விமான நிலையத்தில் ஏ.என்.ஐ செய்தியாளர் , கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக கேள்வியெழுப்பினார்.இதற்குப் பதிலளித்த ஆதவ் அர்ஜூனா, “நீதியை வெளிக்கொணர முயற்சித்து வருகிறோம்” என்றார். மேலும், “உண்மை ஒருநாள் நிச்சயம் வெளிவரும்” என்றும் அவர் கூறினார்.
நன்றி ஏஎன்ஐ#WATCH | Dehradun | On Karur stampede, TVK General Secretary, Adhava Arjuna, says, "We are working for justice. Truth will come out."
— ANI (@ANI) October 4, 2025
Adhava Arjuna, General Secretary of Tamizhaga Vetri Kazhagam (TVK) and President of the Basketball Federation of India, arrived at Jolly Grant… https://t.co/hMuuaQalSO pic.twitter.com/0Tq2bF0bDH
கரூர் கூட்ட நெரிசல் மரணம்தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் செப்.27ஆம் தேதி சனிக்கிழமை நடந்த பேரணியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தனர்.
இந்த விவகாரத்தில் த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரூர் துயரம் குறித்து விசாரிக்க சிறப்பு குழு.. ‘மோசமான தலைமை’ என விஜயை விமர்சித்த நீதிபதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com