Actor Vijay: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 4 2025ல் நடைபெறுகிறது.
Actor Vijay: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 4 2025ல் நடைபெறுகிறது.
Published on: June 27, 2025 at 12:01 pm
Updated on: June 27, 2025 at 9:39 pm
சென்னை, ஜூன் 27 2025: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்திவருகிறார். இந்தக் கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காண்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நடிகர் விஜய் தீவிரமாக செய்துவருகிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பூத் ஏஜெண்டுகளை நியமிக்கும் பணிகள் கூட நடைபெற்று வருகின்றன.
விஜய் சுற்றுப் பளணம்
இந்த நிலையில் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுக்க கட்சியை வளர்க்க சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணம் ஜூலை மாதத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் குறித்த தகவல்கள் வெளியாகின்றன. அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் ஜூலை 4 2025ஆம் தேதி நடைபெறுகிறது.
பனையூரில் கூட்டம்
இந்தக் கூட்டமானது சென்னை பனையூரில் ஜூலை 4ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசியலை பொறுத்தமட்டில் தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க.வும், பாரதிய ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க.வும் உள்ளன.
நடிகர் விஜய் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலை தனித்து களம் காணும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பள்ளிக்கூடங்களை மதுபானக்கூடங்களாக.. தி.மு.க அரசு மீது டி.டி.வி கடும் தாக்கு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com